Admin

23 -ஆம் ஆண்டு திருமந்திரம் முற்றோதல் விழா

23 -ஆம் ஆண்டு திருமந்திரம்  முற்றோதல் விழா  திருமந்திர தமிழ்மாமணி, சித்தாந்த கவிமணி, செந்தமிழ் வேள்விச்  சதுரர் ஐயா சத்தியவேல் முருகனாரின் தலைமையிலும்  வழிகாட்டுதலிலும் 25 – 12-2103 அன்று நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக!!!                              திருமூலர் தமிழில் திளைத்திடுக!!! விழா அழைப்பிதழை கீழே காண்க!!!

தோமாவும் தமிழ்நாடும் – ஓர் அரைகுறை ஆய்வரங்கம்

கட்டுரையாளர்: செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புகழாரம்! பதிலுக்குக் கலைஞர் ஜெயலலிதாவிற்கு ஆசி!” இது எப்படி நடக்கவே நடக்காத கற்பனையோ அதை விட கற்பனை ஒன்றை முன்னிறுத்தி அய்வரங்கம்என்ற பேரில் அழைத்தார் முனைவர் மு.தெய்வநாயகம் அவர்கள். தலைப்பு இது தான்: “இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறுத்துவ நாடே – எவ்வாறு?” இந்த ஆய்வரங்கத்திற்கு என்னை அழைத்தார். ‘இது எனக்கு உடன்பாடில்லாதது; எனவே […]

பெண்ணியம் பெண்மையைப் பொசுக்கவா ?

பெண்ணியம் பெண்மையைப் பொசுக்கவா ? செந்தமிழ்மாருதன் சத்தியவேல் முருகனார்.       பெண்ணியம் என்ற சொல் தமிழ்ச்சொல்லுலகில் புதிதாகச் சிலரால் படைத்து மொழிந்து சமூக தளங்களில் புகுத்தி உலாவ விடப்பட்ட சொல். இதைப் பற்றி ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-10-2013 – ஆம் நாள் நடந்து முடிந்தது.       நிகழ்ச்சித் தொகுப்பாளர் நாடறிந்த ஒருவர் தாம். அவர் தமக்குத் தெரிந்த பெண்ணியப் போராளிகளை எல்லாம் ஒரு புறம் கூட்டி வைத்து அந்த வீராங்கனைப் […]

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம் – (செய்யுள் வடிவில்)

உ முருகா இந்த சிற்றிலக்கியக் கவியைக் சுவாமிகளுக்குச் சமர்ப்பிக்க வாரியார் சுவாமிகள் கவிநயம் கண்டு மகிழ்ந்து உடுமலைப்பேட்டை சொற்பொழிவில் (28-09-1975) ஆசிரியர் அவர்களுக்கு “இளங்கம்பன்” என்று வர்ணித்து பட்டமளித்தார். அப்போது ஆசிரியர் திரு மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வரலாறு இயற்றியவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் விநாயகர் காப்பு புந்திக்குள் தித்திக்கச் சந்திக்கும் தும்பியே வந்தித்தேன் வந்தெனைக் கா ஆற்று வளம் ஒளிர்ந்தோடி உலகாயும் ஆதவனை அஞ்சி ஒண்கற்போ […]

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

இயற்றியவர் சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill ************************************* தானதன தானதனத் தந்தனதான –தானத் தந்தனத் தானதனத் தந்தனதான ———————————————————————————— ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்    கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்? தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை    மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன் பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்    போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும் அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை    […]

கடவுளோடு ஒரு கலந்துரையாடல்

திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமான் பரபரப்படைந்தார். அந்த பரபரப்பில் அவர் திருமுடியில் வைத்து மலர்களில் சில உதிர்ந்தன. ‘தொழில் பூசனை’ செய்த குருக்கள், மனத்திற்குள்ளே மறுகி வைத்த தம் மனுவிற்கு இறைவன் அருள்புரிந்தான் என்று கீழே விழுந்த பூவைக் கண்ணில் ஓற்றிக் கொண்டு வெளியேறினார். ‘இவன் ஒருத்தன் இடையிலே! அதோ, இரமலிஙம்வருகிறான்; தினந்தோறும் என்னைத் தன்னேரிலாத் தண்டமிழால் மடக்கு மடக்கு என்று மடக்குகிறான்; ஆனால் அதுவும் கேட்பதற்கு இன்பமாகத் தான் இருக்கிறது. நான் சங்கம் வைத்து வளர்த்த செந்தமிழாயிற்றே! […]

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும். நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு: ந – நடப்பு ம – மறைப்பு சி – சிறப்பு வ –வனப்பு ய – யாப்பு இதில், நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும். மறைப்பு […]